அப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 கைப்பேசி தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.
இக் கைப்பேசி அறிமுகம் செய்யும் திகதியும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சீன இணையத்தளம் ஒன்று இதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசியின் மூன்று வடிவங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதன்படி 4.7 அங்குல அளவினைக் கொண்ட iPhone 7, 5.5 அங்குல அளவைக் கொண்ட iPhone 7, மற்றும் 5.5 அங்குல அளவில் iPhone Pro ஆகிய கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அத்துடன் மேற்கண்ட ஒவ்வொரு பதிப்பிலும் அவற்றின் வன்பொருள் அம்சங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.