ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான ஸ்மார்ட் கைப்பேசிகளே iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகும்.
இவ்விரு கைப்பேசிகளிலும் 32 GB, 128 GB, 256 GB என்ற சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட வேர்ஷன்கள் காணப்படுகின்றன.
இப்படியிருக்கையில் இப்புதிய ஐபோன்கள் மிகவும் மந்தமாக சார்ஜ் ஆவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிருந்தது.
இது ஐபோன் பிரியர்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது இப் புதிய ஐபோன்களில் 128GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசியிலும் பார்க்க 32GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசியில் மிகவும் மந்தமாக தரவுகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பரீட்சிப்பதற்காக ஒரே அளவு கொள்ளளவுடைய டேட்டாவை இரு கைப்பேசிகளுக்கும் பரிமாற்றம் செய்து பார்க்கையில் 128GB கொள்ளளவுயை கைப்பேசியிலும் பார்க்க 1 நிமிடங்கள் பிந்தியே 32GB கொள்ளளவுடைய கைப்பேசியில் தரவுகள் முழுமையாக சென்றடைந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.