உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE இனை அறிமுகம் செய்திருந்தது.இக் கைப்பேசியானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் 6S Plus என்பவற்றினைக் காட்டிலும் தடிப்பம் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
எனினும் அடுத்ததாக அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 மற்றும் 7 Plus என்பன iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய கைப்பேசிகளினை விடவும் குறைந்த தடிப்பம் உடையதாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. தவிர எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியில் Apple A10 Processor, பிரதான நினைவகமாக 3GB அல்லது 4GB RAM உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. |