இந்த வருடம் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியின் மூன்று பதிப்புக்களை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதாவது 4.7 அங்குல திரையுடைய கைப்பேசி ஒன்றும், 5.5 அங்குல சாதாரண திரை மற்றும் OLED திரையினைக் கொண்ட இரு பதிப்புக்களுமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அத்துடன் பின்புறம் துருப்பிடிக்காத உருக்கினாலும், முன்பகுதி கண்ணாடியினாலும் ஆக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவை தவிர மேலும் சில தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சார்ஜ் செய்யும் வசதி இக் கைப்பேசிகளில் தரப்படவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக Lite-On எனும் ஒரு சாதனம் இக் கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிகின்றது.
எது எவ்வாறெனினும் இத் தகவல்களை உறுதிப்படுத்த இவ் வருடம் செப்டெம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை.