ஸ்மார்ட் கைப்பேசி உலகில் பாரிய புரட்சியை ஏற்படுத்திய கைப்பேசியாக ஐபோன் திகழ்கின்றது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டும் சில புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்து கைப்பேசிகள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் இவ் வருடம் iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது.
இதற்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக குறித்த கைப்பேசியானது துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி என்பவற்றினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக உறுதித் தன்மையும், துருப்பிடிக்காத தன்மையும் காணப்படும்.
அத்துடன் குறித்த கைப்பேசிகளின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எது எவ்வாறெனினும் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 4.7 அங்குல அளவுடைய iPhone 8 மற்றும் 5.5 அங்குல அளவுடைய iPhone 8 இல் இரு பதிப்புக்களுமாக சேர்த்து 3 வகையான ஐபோன்கள் வெளியாகவிருக்கின்றமை உறுதி.