அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
ஏனைய புதிய அப்பிள் கைப்பேசிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் மலிவான இக் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
தவிர தொடர்ந்தும் iPhone SE கைப்பேசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.இதன் காரணமாக 2016ம் ஆண்டின் எதிர்வரும் காலாண்டுப் பகுதியில் சுமார் 5 மில்லியன் iPhone SE கைப்பேசிகளை வடிவமைக்க அப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளது.
ஆரம்பத்தில் மேற்கண்ட காலாண்டுப் பகுதியில் 3.5 மில்லியன் iPhone SE கைப்பேசிகளே வடிவமைக்க திட்டமிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் iPhone SE கைப்பேசியானது iPhone 5S கைப்பேசியினை விடவும் மேம்படுத்தப்பட்டதாகவும், 12 மெகாபிக்சல்களை உடைய கமெரா, Apple A9 Processor என்பனவற்றினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
தவிர 16GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட iPhone SE இன் விலை 399 டொலர்களிலிருந்தும், 64GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட iPhone SE ஆனது 499 டொலர்களிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றது.
இதேவேளை iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய கைப்பேசிகள் அறிமுகம் செய்வதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.