iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல் வெளியாகியது

291
அப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.iPhone 6S கைப்பேசிக்கு நிகரான வன்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இப் புதிய கைப்பேசியில் 4K Ultra HD வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய 12 மெகாபிக்சல்களை உடைய கமெரா உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர Apple A9 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும், 4 அங்குல அளவுடையதும், 1334 x 750 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE