IPL தொடரின் சிறந்த அணி இது தான்…! 17ஆவது கோப்பையை தூக்கும் அணி எது தெரியுமா?

106

 

IPL தொடரின் சிறந்த அணி இதுவாக தான் இருக்கும் என புள்ளி விபரவியல் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

IPL 2024
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.

BCCI இதுவரை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிட்டுள்ளது. மற்றைய போட்டிகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான முன்னாயத்த பயிற்சியில் அனைத்து வீரர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் IPL தொடரிலேயே சிறந்த அணி இதுவாக தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

IPL தொடரின் சிறந்த அணி
புள்ளி விபரங்கள் மூலமாக பார்க்கும் போது சென்னை அணி தான் சிறந்த அணியாக கருதப்படுகிறது.

மும்பை அணியும் சென்னை அணியும் 5 முறைகள் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

தோனியின் தலைமையில் தான் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை IPL தொடரில் கைப்பற்றியது.

இந்நிலையில் சென்னை அணியின் வெற்றி சதவீதத்தை பார்க்கும் போது 59 ஆக உள்ளது. இதுவரையில் 225 போட்டிகளில் விளையாடி 131 ஆட்டங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. எனவே இந்த அணியின் சதவீதமானது 59 ஆக உள்ளது.

இதே வேளையில் மும்பை அணி 247 போட்டிகளில் விளையாடி 138 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. இதன் சதவீதமானது 56.7 ஆக உள்ளது.

இந்த கணக்கை எடுக்கும் நேரத்தில் குறைந்தது 150க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய அணிகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது அதிக சதவீதத்தை பெற்று சென்னை அணி முன்னிலையில் உள்ளது.

இந்த ஆண்டும் சென்னை அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE