IPL போட்டிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – BCCI செயலாளர் ஜெய்ஷா

100

 

2024 ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகள் தொடர்பில் BCCI செயலாளர் ஜெய்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது.

முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.

இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருப்பதால் போட்டி அட்டவணை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே BCCI முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிட்டது. அதாவது மார்ச் 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரையில் வெளியிடப்பட்டிருந்தது.

தேர்தல் நடைபெறுவதால் மீதம் இருக்கும் போட்டிகள் வெளிநாட்டில் நடைபெறலாம் எனவும் அதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் திகதிகளும் வெளியிடப்பட்டுள்ளமையால் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 7ஆம் திகதிக்கு பின்னரான போட்டிகளின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE