IPL 2024ல் இருந்து டெவோன் கான்வே விலகல்: CSK-வில் இணைந்த முக்கிய இங்கிலாந்து வீரர்

117

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவோன் கான்வே-வுக்கு மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை அணியில் சேர்த்துள்ளது.

CSK-வில் புதிய வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ஐபிஎல் 2024 ன் மீதமுள்ள போட்டிகளுக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை(Richard Gleeson) அணியில் இணைத்துக் கொண்டுள்ளதுகாயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள டெவோன் கான்வே(Devon Conway) இடத்தை கிளீசன் நிரப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் கிளீசன் சாதனைகள்
36 வயதான ரிச்சர்ட் கிளீசன், 90 T20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த டி20 சாதனையைக் கொண்டுள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான அவரது அறிமுக டி20 போட்டியில், ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறுகிய ஃபார்மேட் அனுபவம் மட்டுமல்லாமல், முதல் தர கிரிக்கெட்டிலும் கிளீசன் சிறந்து விளங்கியுள்ளார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் தர கிரிக்கெட்டில் 140 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் ஒரு ஐந்து விக்கெட் வீழ்த்தி சாதனையும் அடங்கும்.

புதிய பந்தை ஸ்விங் செய்து, தொடர்ந்து வேகமாக வீசும் திறன் கொண்ட கிளீசன், சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings ) அணிக்கு மிகவும் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

SHARE