IPL 2024: ரிஷாப் பண்ட் தான் கேப்டன் என உறுதிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ்

106

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் ரிஷாப் பண்ட் தான் அணியின் தலைவராக செயல்படுவார் என்று புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷாப் பண்ட், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகின.

இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஐபிஎல் தொடரில் பண்ட்டின் ஆட்டத்தை காண கிரிக்கெட் பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் ரிஷாப் பண்ட்டின் புகைப்படத்தை கேப்டன் என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது.

அத்துடன் மன உறுதி. தீர்மானம். நம்பிக்கை. ரிஷாப் பண்ட் என்றும் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷாப் பண்ட், ஒரு சதம் மற்றும் 15 அரைசதங்களுடன் 2,838 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 129 சிக்ஸர், 260 பவுண்டரிங்கள் அடங்கும்.

SHARE