IPL 2024: வீணான கோலியின் ருத்ர தாண்டவம்..தட்டித் தூக்கிய ஷ்ரேயாஸ் ஐயர் படை

105

 

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

விராட் கோலி ருத்ர தாண்டவம்
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் அணித்தலைவர் பாப் டு பிளெஸ்ஸிஸ் 8 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த கிரீன் அதிரடியாக 21 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்தார். தொடக்க வீரர் விராட் கோலி ருத்ர தாண்டவம் ஆட, மேக்ஸ்வெல் அவருக்கு உறுதுணையாக ஓட்டங்களை சேர்த்தார்.

இதன்மூலம் பெங்களூரு அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேக்ஸ்வெல் 28 (19) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து பட்டித்தார் (3), அனுஜ் ராவத் (3) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி அரைசதம் கடந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 8 பந்தில் 20 ஓட்டங்கள் குவித்தார்.

பெங்களூரு அணி 182
விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 182 ஓட்டங்கள் எடுத்தது. ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஜோடி நரைன், சால்ட் 39 பந்துகளில் 86 ஓட்டங்கள் குவித்தது.

வாணவேடிக்கை காட்டிய நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார். சால்ட் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி வெற்றிப்பாதைக்கு அணியை அழைத்துச் சென்றது. சிக்ஸர்களை பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், 30 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் கொல்கத்தா அணி 16.5 ஓவரிலேயே 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 39 (24) ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.

SHARE