அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தார். அத்தோடு தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் இணையவசதி, விலையில்லா தொலைபேசி அழைப்பு, ரோமிங் செலவு என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றதுடன் வெற்றியும் கண்டது.
இக்காரணத்தால் பல தொலைபேசி நிறவனங்கள் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்ததுடன் தொய்வையும் சந்தித்தது. இருந்தும் போட்டியை சமாளிக்க பல புதிய முயற்சிகள் தோன்றியவண்ணமே காணப்படுகின்றது.
தற்போது இப்போட்டியை சமாளிக்க இரண்டு நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்காக பி.எஸ்.என்.எல் – வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தமும் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக வோடபோனின் 1,37,000 டவர்களும் பி.எஸ்.என்.எலின் 1,14,000 டவர்களும் இணைக்கபட்டு பகிர்ந்து கொள்வதால் டவர் பிரச்சனையில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.
இவ்வாறான போட்டிதன்மைகள் காணப்பட்டால் சந்தையில் தரமான பொருட்கள் வரும் என்பது மட்டும் நிச்சயமே.