விஜய் டிவியில் முன்னணி காமெடியனாக இருந்தவர் பாலா. கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் அவர் காமெடியனாக கலக்கி வந்த நிலையில் சமீப காலமாக அவர் விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார்.
தற்போது சினிமா, youtube சேனல் என அவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல விஷயங்களை பாலா செய்து வருகிறார். அதற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஷாக் கொடுத்த பெண்
KPY பாலாவுக்கு சமீபத்தில் பெண் ஒருவர் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
பாலாவின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டிருக்கிறார் அவர். அவருடன் எடுத்து கொண்ட போட்டோவை பாலா நெகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார்.