Laptop வேகத்தை அதிகரிப்பது எப்படி?…

290

இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்வோர் கூடக் கையில் லாப்டாப் வைத்திருக்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளும் இதற்குக் காரணம் ஆகும். எதுவானாலும் நம்ம பசங்க கையில் இருக்கும் போது புதிதாய் வாங்கிய லாப்டாப் கூட சீக்கிரமே மக்கர் பண்ணலாம்.

பொதுவாக புதிய லாப்டாப் கோளாறுகள் அதன் வேகத்தில் இருந்தே துவங்கும். முதலில் வேகம் குறைந்து பின் ஹேங் ஆவது எனப் பிரச்சனை பட்டியல் நீளும். இத்தனை பிரச்சனைகளைத் தவிர்க்க லாப்டாப் வேகம் குறைய ஆரம்பிக்கும் போதே அதனைச் சரி செய்ய வேண்டும்.

* முதலில் லாப்டாப்பில் வைரஸ் புகுந்துள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். முறையான ஆன்டிவைரஸ் மென்பொருள் இல்லாத போது வைரஸ் ஆபத்து அதிகமாகும். இதனால் லாப்டாப் வேகம் குறையும் போது ஆண்டிவைரஸ் மென்பொருள் மூலம் லாப்டாப்பினை முழுமையாக ஸ்கேன் செய்ய வேண்டும்.

* லாப்டாப் கொண்டிருக்கும் அனைத்து மென்பொருள்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும், முறையான அப்டேட் இல்லாத போதும் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.

* லாப்டாப் வேகம் குறைய போதுமான மெமரி இல்லாததும் காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக லாப்டாப்பில் பயன்படுத்தாமல் இருக்கும் மென்பொருள்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

* வெப் பிரவுஸர்களில் இருக்கும் தேவையற்ற டூல் பார்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது லாப்டாப் வேகம் அதிகரிக்கும்.

 

SHARE