G6 எனப்படும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை LG நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கமெராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ள இக் கைப்பேசியானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 2,880 x 1,440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 821 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64/128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் தலா 16 மெகாபிக்சல்களைக் உடைய இரு பிரதான கமெராக்கள் (DualCAMERA) மற்றும் 12 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இக் கைப்பேசியில் 30 நிமிடங்களில் 83 சதவீதம் வரை விரைவாக சார்ஜ் ஆகக் கூடிய மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.