LG G Flex 2 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்

415
LG நிறுவனம் கடந்த வருடம் LG Flex எனும் வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.இக்கைப்பேசியானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் LG G Flex 2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

5.5 அங்குல அளவு 1920 x 1080 Pixel Resolution உடைய வளையக்கூடிய Plastic OLED திரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Eight Core 64-bit Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கூகுளின் Android 5.0 Lollipop இயங்குதளத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த கைப்பேசி தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE