ஸ்பெயினின் பார்சிலோனாவில் அடுத்த வாரம் Mobile World Congress நடைபெறவுள்ளது, இங்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்.
LG நிறுவனத்தின் சார்பில் அறிமுகமாகவுள்ள LG G6 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் புகைப்படங்கள் லீக்காகியுள்ளன, 5.7 இன்ச் டிஸ்பிளேயுடன் 2880 x 1440 பிக்சல் ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் களமிறங்கவுள்ளது.
இதுதவிர 4GB RAM, Qualcomm Snapdragon 821 processor மற்றும் Android Nougat-வுடன் இயங்கவுள்ளது, 13 MB பின்புற கமெரா வசதியும் தரப்பட்டுள்ளது.