நத்திங் போன் தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமாக அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விலை குறைப்பு
நத்திங் ஸ்மார்ட்போன் உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த நிறுவனம் தன்னுடைய நத்திங் போன் 2 என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.
அப்போது அதன் அடிப்படை மாடல் விலை ரூ. 44,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு களமிறங்கியது.
இந்நிலையில் ரசிகர்களை அதிகம் கவரும் நோக்கி நிறுவனம் நத்திங் போன் 2-வின் விலையில் அதிரடியாக ரூ.5000 விலை குறைப்பு செய்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் நத்திங் போன் 2 வின் தொடக்க விலை ரூ.39,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சில வங்கி சலுகைகள் பயன்படுத்தினால் கூடுதல் விலை குறைப்பு சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 2 சிறப்பம்சங்கள்
6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் நத்திங் போன் 2 இயங்குகிறது.
நத்திங் போன் 2 மாடல் 12ஜிபி ரேம் முதல் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வரை வழங்கப்படுகிறது.
50 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க இரட்டை கேமரா, செல்பி கேமரா 32 மெகாபிக்சல்.45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700 mAh கொண்ட பேட்டரி திறன் நத்திங் போன் 2வில் கொடுக்கப்பட்டுள்ளது.