NZ vs AUS 2nd T20: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.
உலக சாம்பியனான அவுஸ்திரேலியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.தொடர்ந்து இரண்டாவது வெற்றியுடன் டி20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா.
முதல் டி20யில் கிவீஸை வீழ்த்திய மிட்செல் மார்ஷ் அணி, இரண்டாவது டி20யிலும் வெற்றி பெற்றது.
டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 45 ஓட்டங்களை குவித்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 174 ஓட்டங்கள் எடுத்தது.
அதன்பிறகு, பந்துவீச்சிலும் அவுஸ்திரேலிய அணி சிறப்பாகச் செயல்பட்டு நியூசிலாந்து அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம், இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் ஹெட் (45), பேட் கம்மின்ஸ் (28), கேப்டன் மிட்செல் மார்ஷ் (26) மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் பெர்குசன் 4 விக்கெட்டுகளையும், மில்னே மற்றும் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சிறிய இலக்கை நோக்கிய நியூசிலாந்து அதிலிருந்து தடுமாறியது. ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் (42) தனித்து போராடினார்.
இறுதியில் டிரென்ட் போல்ட் (16), ஜோஷ் கிளார்க்சன் (10) சிறிது நேரம் போராடியும் அது போதவில்லை. ஆடம் ஜம்பா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, கிவிஸ் 17 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டாவது தோல்வியுடன் தொடர் முடிந்தது.
மூன்றாவது டி20 போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 25ஆம் திகதி) நடைபெறவுள்ளது.