நோக்கியா நிறுவனம் தனது அன்ரோயிட் கைப்பேசியினை இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் முகமாக கைப்பேசி வடிவமைப்பினைத் தாண்டி மொபைல் வலையமைப்பு தொடர்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றது.
இதன் அடிப்படையில் ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வேறு சில நிறுவனங்களும் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அனைத்து பரிசோதனை நிலையிலேயே உள்ளது.
எந்தவொரு நிறுவனமும் முற்றுமுழுதாக 5G தொழில்நுட்பத்தினை இதுவரை உருவாக்கவில்லை.
எனவே பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Orange உடன் இணைந்து இத் தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது உள்ள 4G தொழில்நுட்பத்தினை விடவும் 5G தொழில்நுட்பமானது பல மடங்கு வேகம் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.