Run Out ஆகியும் அவுட்டை கொடுக்காத அம்பயர்.., கோபமடைந்த அவுஸ்திரேலிய வீரர்கள்

119

 

ரன் அவுட் செய்த போதும், அம்பயர் ரன் அவுட் ஏன் கொடுக்கவில்லை என்று அவுஸ்திரேலிய வீரர்கள் கோபமடைந்தனர்.

T20 தொடர்
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை அடுத்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 -வது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலியா அணி 241 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக இறங்கினாலும் விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, 12 பந்துகளில் 53 ரன்கள் தேவை என்ற நிலையில் 11வது வரிசையில் அல்சாரி ஜோசப் களமிறங்கினார்.

Run Out கொடுக்காத அம்பயர்
19 -வது ஓவரில் மூன்றாவது பந்தை அல்சாரி ஜோசப் அடித்த போது ரன் எடுக்க ஓடினார். ஆனால், அவரை அவுஸ்திரேலிய வீரர்கள் ரன் அவுட் செய்தனர். ஆனால், அல்சாரி ஜோசப் கிரீஸுக்குள் வந்ததாக நினைத்து அவர்கள் அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை.

ஆனால், அடுத்த நிமிடத்தில் ஸ்கீரினில் அல்சாரி ஜோசப் க்ரீஸுக்குள் வரவில்லை என்பது காட்டப்பட்டது. அப்போது, அவுஸ்திரேலிய வீரர்கள் அம்பயரிடம் ஏன் அவுட் கேட்கவில்லை என்று கேட்டனர்.

அதற்கு அவர், நீங்கள் யாரும் அவுட் கேட்கவில்லை. விதிப்படி அவுட் கேட்டால் மட்டுமே அவுட் கொடுக்க வேண்டும் என கூறினார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் தான் அவுட் கேட்டதாக வாக்குவாதம் செய்தார். இதன் பின்னர், ஆட்டத்தை தொடருங்கள் என அவர் கூறினார்.

ஆனால், இந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு சாதகமான நிலை இருந்ததால் சுமூகமாக முடிந்தது. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

SHARE