Samsung 5G Smart Phone மீது திடீரென விலை குறைப்பு.. Amazon, Flipkart தளத்தில் வாங்கலாம்

117

 

இந்தியாவில் Samsung Galaxy A34 5G Smart Phone மீது சலுகை மற்றும் உடனே தள்ளுபடி ஆகிவை அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி அறிவிப்பு
Samsung நிறுவனம் இந்தியாவில் மிட்ரேஞ் செக்மென்ட்டில் Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் மீது Cashback சலுகையை Samsung நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ரூ.3000 மதிப்பிலான உடனடி தள்ளுபடியை பெறுகிறது. அதன்படி, ரூ.27,499 விலையில் விற்பனை செய்யப்பட்ட 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் விலை ரூ.24,499 ஆக குறைந்துள்ளது.

அதே போல, 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.26,499 ஆகவும், 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.22,999 ஆகவும் குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட விலையானது சாம்சங் இந்தியா இணையதளம், Amazon மற்றும் Flipkart ஆகியவற்றில் லைவ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு Samsung Galaxy A34 5G Smart Phone ரூ.30,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் ஆனது. இந்த போனானது Light Green, Black, Light Violet, Silver ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இந்த போன், FHD+ தெளிவுத்திறனுடன் 6.6″ இன்ச் Super AMOLED display, 120Hz refresh rate வீதத்துடன் வருகிறது. மேலும், Corning Gorilla Glass 5, MediaTek Dimensity 1080 chipset, OIS ஆதரவுடன் 48MP primary sensor, 8MP ultrawide lens, 5MP macro lens ஆகியவை உள்ளன.

SHARE