சாம்சுங் நிறுவனமானது குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் இப் புதுவருடத்தில் அடுத்து அடுத்து இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது சாம்சுங்.
Galaxy A5 (2017) மற்றும் Galaxy A7 (2017) ஆகிய கைப்பேசிகளையே அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.
இவற்றில் Galaxy A5 கைப்பேசியின் விலையானது 54,000 ரூபாவாகவும், Galaxy A7 கைப்பேசியின் விலை 64,000 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
மேலும் இவ்விரு கைப்பேசிகளும் ஜனவரி 6ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தவிர இவற்றுடன் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஹெட்போனும் தரப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இக் கைப்பேசிகள் தொடர்பான ஏனைய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.