Samsung Galaxy A9 Pro தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

294
சம்சுங் நிறுவனமானது Galaxy A9 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ள நிலையில் விரைவில் சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இக் கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5000 mAh மின்கலம், Android 6.0.1 Marshmallow இயங்குதளம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 540 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

SHARE