சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy J7 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் தற்போது அக் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 650 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினையும் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான கமெரா, பிங்கர் பிரிண்ட் ஸ்கானர் என்பனவும் தரப்பட்டுள்ளன. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |