சில வாரங்களுக்கு முன்னர் Samsung Galaxy S5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த சம்சுங் நிறுவனம் தற்போது Samsung Galaxy S5 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளது.இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு 1280 x 720 Pixels Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Exynos 3470 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1.5GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. |