Samsung Galaxy S8 கைப்பேசியின் உத்தியோகபூர்வ படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது!

223

கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S8 மற்றும் Galaxy S8 Plus ஸ்மார்ட் கைப்பேசிகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் Galaxy S8 ஆனது 5.8 அங்குல திரையினைக் கொண்டதாகவும், Galaxy S8 Plus ஆனது 6.2 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

மேலும் முறையே 3,000 mAh, 3,500 mAh மின்கலங்கள், Exynos 8895/Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் 12 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளன

தவிர இவ்விரு கைப்பேசிகளும் Android 7.0 Nougat இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் Galaxy S8 கைப்பேசியின் விலை 799 யூரோக்கள் ஆகவும், Galaxy S8 Plus கைப்பேசியின் விலை 899 யூரோக்களாகவும் காணப்படுகின்றது.

SHARE