சாம்சுங் நிறுவனம் தனது உற்பத்திகளை ஒன்லைனில் இலகுவாகவும், விரைவாகவும் வாங்கிக் கொள்வதற்கு Samsung Pay வசதியினை அறிமுகம் செய்திருந்தது.
குறித்த வசதியானது தற்போது ஆஸ்திரேலியா (Australia), பிரேசில் (Brazil),கனடா (Canada),சீனா (China),ரஷ்யா (Russia),சிங்கப்பூர் (Singapore),தென் கொரியா (South Korea), ஸ்பெயின் (Spain), மற்றும் அமெரிக்க (US)போன்ற நாடுகளில் தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது 500 ரூபா, மற்றும் 1,000 ரூபா நோட்டுகளிற்கு தடைவிதித்துள்ள நிலையில் தனது பயனர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை நீக்குவதற்கே Samsung Pay வசதியினை விரைவாக அறிமுகம்செய்யவுள்ளது.
அத்துடன் கைப்பேசி சந்தையில் இந்தியாவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றமையும் மற்றுமொரு காரணமாகும்.
மேலும் 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் இந்த சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.