Hero நிறுவனம் புதுவிதமான Two-in-One எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதுமையான வாகனங்களை அறிமுகம் செய்வதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான Hero, Two-in-One எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
Hero MotoCorp-இன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Surge, தேவைக்கேற்ப இரு சக்கரமாகவும் மூன்று சக்கர வாகனமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய Two-in-One Electric வாகனத்தை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற Hero World 2024 நிகழ்விலும் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.
Surge S32 என அழைக்கப்படும் இந்த முச்சக்கர வாகனத்தை வெறும் 3 நிமிடங்களில் இரு சக்கர வாகனமாக மாற்றி அமைக்க முடியும்.
வணிகத் தேவைக்காக மூன்று சக்கர வாகனமாகவும், தனிப்பட்ட தேவைகளுக்காக இரு சக்கர வாகனமாகவும் மாற்றலாம்.