T-Mobile ஊடாக களமிறங்கும் LG V20 ஸ்மார்ட் கைப்பேசி

231

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

சிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கி உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் LG நிறுவனம் மற்றுமொரு புதிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

LG V20 எனும் இக் கைப்பேசியினை ஜேர்மனில் தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்கி வரும் T-Mobile ஊடாக அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

இதனை T-Mobile நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதன்படி எதிர்வரும் 28ம் திகதி குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1440 x 2560 Pixel Resolution உடைய தொடுதிரை, Qualcomm MSM8996 Snapdragon 820 Processor என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM, சேமிப்பு நினைவகமாக 32/64 GB என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 3200mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE