TELO ஜனாவின் இரகசியக் கொளைகள் அம்பலம்! செல்வம் MPயின் பதில் என்ன??

2125

யார் அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? இப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? கள்ளு,சாராயம்,வடிசாராயம் கஞ்சா, வீடி, சுறுட்டு, இவை அனைத்திற்கும் அடிமையானவந்தான் இந்த மாமா! இவனின் சொந்த பெயர் கோவிந்தன் கருணாநிதி சொந்த ஊர்தான் செட்டிபாளையம் இவன் வேறு யாருமல்ல கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வின் சொந்த தம்பி!

அணைத்து இயக்கங்களும் ஒன்றாக இருந்தபோது எல்லா இயக்கங்களிலும் மற்றும் பொதுமக்களிடமும் இவன் நன்றாக அடி வேண்டியுள்ளான் இதனை அறிந்து கொண்ட ஜனா தனது தம்பியையும் டெலோ அமைப்பில் சேர்த்துக்கொண்டார் இதில் நிறைய டெலோவின் பழைய உறுப்பினர்களுக்கு மாமாவின் வருகை விருப்பமில்லாமல் இருந்தது ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏன் என்றால் ஜனாவின் ஆதிக்கம் டேலோவில் அதிகமாக இருந்தது.

TELOவில் சேர்ந்து கொண்ட மாமா தான் அடி வேண்டிய பொதுமக்களை பழிவேண்ட நினைத்தான் அதில் ஒரு குடும்ப கொலைதான் சினதம்பி கோபாலப்பிள்ளை சி . சாந்தலிங்கம் சி . தெய்வநாயகம் இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

இவர்கள் செட்டிபாளையத்தின் அயல் கிராமமாகிய மாங்கட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் இவர்கள் மீது மாமாவுக்கு அதிக கோபம் இருந்தது ஏன் என்றால் இவர்கள் மாமாவின் அராஜகத்தை தட்டி கேட்டவர்கள் அதனால் மாமா அவர்களை கொலை செய்வதற்கான சந்தர்பத்தை எதிர்பாத்து கொண்டிருந்தான் அதற்கான சந்தர்பமும் மாமாவிட்கு கிடைத்தது.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது சி. தெய்வநாயகம் என்பவரை மாமா கொலை செய்தான் இவர் புலி என்று இந்திய இராணுவத்துக்கு அறிவிக்க பட்டது இதனால் மற்ற சகோதரர்கள் பயத்தினால் அச்சத்தோடு வாழ்ந்தார்கள் இதே காலகட்டத்தில் சாந்தலிங்கம் என்பவரும் கொலை செய்யப்பட்டார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் மனைவி இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்ட்டிருக்கின்றார்.

அதன் பின்னர் சி . கோபாலப்பிள்ளை மாமாவினால் பிடிக்கபட்டு செட்டிபலயத்தில் அமைந்திருந்த இலங்கை இராணுவமுகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்படார் இவர்கள் எல்லோரும் புலிகள் என்றுதான் இலங்கை இந்திய இராணுவத்துக்கு அப்போது பாராளுமண்ற உறுப்பினராக இருந்த ஜனாவினால் கூறப்பட்டது. அதன் பின்னர் இவர்களின் மூத்த சகோதரராகிய சின்னதம்பி அழகையா என்பவரின் மூன்று பிள்ளைகளாகிய நடேசன்,கமலநாதன்,யோகநாதன் ஆகிய மூவரும் மாமாவின் தகவலின் பிரகாரம் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டார்கள்.

அதுமட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருக்கிலேசி குணம் திருகிலேசி பேரின்பம் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்களும் மாமாவினால் கொலை செய்யப்பட்டார்கள் அது மட்டுமல்ல செட்டிபாளையத்தின் அயல் கிராமமாகிய குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் என்பவர் மாமாவினால் பிடிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு காத்தான்குடி வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிட்சை பலனின்றி மரணமானார் இதற்கான முழுப்பொறுப்பும் மாமாவையே சாரும் அதுமட்டுமல்ல நாகமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா (வாவு)என்கின்ற மாணவன் செட்டிபாளையத்தில் திரு அமலநாதன் அப்போது பிரதேச செயலாளராக இருந்தவரின் வீட்டில் நின்று செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று கொண்டிருந்தவரை இரவு நேரத்தில் மாமாவினால் சுட்டு கொலை செய்யப்பட்டான்.

இதை ஜனாவினாலோ அல்லது மாமாவினாலோ மறுக்க முடியுமா? அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி முத்துலிங்கம் என்பவர் கிரான்குளத்தில் வைத்து ஜனாவின் உத்தரவுக்கு அமைய வெட்டி கொலை செய்யப்பட்டார் இதை ஜனாவால் மறுக்க முடியுமா?

அந்த வறுமையான குடும்பத்திற்கு இந்த ஜனாவால் என்ன ஆறுதல் கூறமுடியும்?அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரேகா என்கின்ற பெண் தேற்றாத்தீவை பிறப்பிடமாக கொண்ட தங்கவேல் என்பவரை திருமணம் செய்திருந்தார் இவரின் தம்பியை பிடிப்பதட்காக தங்கவேலை பிடித்து சென்று விட்டார்கள் மறுநாள் அவரின் தம்பியும் பிடிக்கப்புட்டு இருவரும் ஒன்றாக அடித்து கொலை செய்யப்பட்டார்கள் இதை ஜனாவினாலோ அல்லது மாமாவினாலோ மறுக்க முடியுமா?

அந்த வறிய குடும்பத்தில் இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விதவைக்கு இவர்களினால் என்ன ஆறுதல் கூறமுடியும்?இதே நிலைமை ஜனாவின் குடும்பத்திட்கு ஏற்பட்டால் தான் அதன் வலி என்னவென்று தெரியும்! அது மட்டுமல்ல மங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவவும் கொண்ட சீனித்தம்பி யோகராசா என்பவர் ஜனாவின் உத்தரவின் படி கொலை செய்யப்பட்டார் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு இப்போதும் அவரின் மனைவி விதவையாக வாழ்கின்றாள் இவர்களுக்கு இந்த ஜனாவினால் என்ன ஆறுதல் கூறமுடியும்?அது மட்டுமல்ல செட்டிபாளையத்தை பிறப்பிடமாக கொண்ட ஏகாம்பரம் யோகராசா

குமாரசாமி கிருபா என்கின்ற இருபரும் ஜனாவினால் கட்டாய இராணுவத்துக்கு சேர்க்கபட்டார்கள் அப்போது இருந்த (தமிழ் தேசிய இராணுவம்) அதிலிருந்து இருவரும் தப்பி சென்ற ஒரே காரனத்திற்காக இருவரும் பிடித்து கொலை செய்யபட்டார்கள் இந்த ஜனா நினைத்திருந்தால் அவர்களை நிச்சயமாக காப்பாத்தி இருக்க முடியும் ஆனால் கொலைக்கான உத்தரவே இந்த ஜனாவினால்தான் பிறப்பிக்க பட்டது என்பதுதான் உண்மை இதனால் பாதிக்க பட்ட அந்த கஸ்ரமான குடும்பங்களுக்கு இந்த ஜனாவினால் அவர்களின் பிள்ளைகளை திருப்பி கொடுக்க முடியுமா? இப்படி ஜனா மற்றும் மாமா ஆகியோரின் கொலைகள் கொள்ளைகள் பற்றி எழுதுவதற்கு நிறைய உண்டு.

அந்த உணமைகளை தொடர்ந்தும் எழுதுவேன் மற்றும் ஜனா மாமாவின் நடவடிக்கைகளில் நிறைய டெலோ பழைய உறுப்பினர்களுக்கு உடன்பாடில்லை அதை சிலர் வெளிப்படையாக ஜனாவிடம் கூறியவர்கள் ஜனாவினால் பழிவாங்க பட்டர்கள் அதில் ஒருவர்தான் செட்டிபாளையத்தை சேர்ந்த கந்தையா குணம் (பலு)இவரும் டெலொவில் பழைய உறுப்பினர் இவருக்கு ஜனா மற்றும் மாமாவின் தன்னிச்சையான செயல் பாட்டினை வன்மையாக எதிர்த்தவர் அந்த ஒரே காரனத்திட்காக ஜனாவினால் பலுவை கொலை செய்வதட்கான திட்டம் தீட்டப்பட்டு அதை கட்சிதமாக செய்தும் முடித்தார்.

இந்திய இராணுவம் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியவுடன் அப்போது இருந்த தமிழ் தேசிய இராணுவம் காட்டு பாதையினால் திருகோணமலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜனாவின் விசுவாசிகளினால் பாலு சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை அனால் புலிகள் தான் பாலுவை கொண்றனர் என்று கூறப்பட்டாலும் அதுவல்ல உண்மை

மாமாவின் செயல் பாட்டினில் இலங்கை இராணுவத்துக்கு கூட பிடிக்க வில்லை அப்படியான ஒருசில அதிகாரிகளும் இருந்தார்கள் அதை உண்மையாகும் வகையில் செட்டிபளையத்தின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மாமாவின் பொதுமக்களின் மீதான அட்டகாசத்தை எதிர்த்து மாமாவை அடித்து இராணுவ முகாம் ஜெயிலில் அடைத்தார்.

அதை அறிந்துகொண்ட ஜனா தனது பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி தனது தம்பியை விடுதலை செய்தார் அத்தோடு இராணுவ உயர் அதிகாரிகளிடம் கதைத்து அந்த அதிகாரியையும் இடமாற்றம் செய்தான் அதன் பின்னர் ஜனாவின் பாராளுமண்ற அதிகாரம் பறிபோனது மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.

மக்களினால் தூக்கி வீசப்பட்டார் பின்னர் கொள்ளை அடித்து சேர்த்த பணத்தோடு லண்டன் சென்றார் பின்னர் மாமா சவுதி அரேவியா சென்றான் அங்கு மாமாவினால் பாதிக்க பட்டவர்களினால் தாக்கப்பட்டு மீண்டும் நாடு திரும்பினான் அவனை பல லச்சங்கள் செலவுபண்ணி ஜனா தன்னோடு லண்டனுக்கு எடுத்து கொண்டான் இப்போது கொலைகாற மாமா லண்டன் ஜெயிலில் உள்ளதாக அறிகின்றேன் அனால் அதை உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்தோடு கொலைகார ஜனா கொள்ளை அடித்த பணத்தை வைத்து செல்வம் அடைக்கலனாதனுக்கு பணம் கொடுத்து கூட்டமைபினில் மாகாண சபையில் போட்டியிடுவதற்கான இடத்தை பெற்று கொண்டான் அதில் போட்டியிட்டு ஒரு கோடி பணத்திற்கு மேல் செலவு பண்ணி மாகாண சபை உறுப்பினர் பதவியையும் தனது கொள்ளை அடித்த பணத்தையும் வைத்து உல்லாசமாக!  இவை அணைத்தும் கூட்டமைப்பினரால் உருவாக்கி கொடுக்கப்பட்டவை.

பொது மக்களின் காவலாளியாக நிக்க வேண்டிய கூட்டமைப்பு கொலையாளியின் பாதுகாவலராக இருப்பதன் மர்மம் என்ன?கூட்டமைப்பு ஜனாவின் கொள்ளை அடித்த பணத்திற்கு அடிபணிந்து விட்டார்களா? கூட்டமைப்பினர் தங்களின் மௌனத்தை கலைப்பார்களா?

TELOவின் கொலைகளுக்கான ஆதாரங்கள்

01. ஜனா, பிரசன்னா கொலைகள் நீரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம் செல்வம் MP, சிவாஜிலிங்கம்

02. TELO படுகொலை செய்தது கலங்கிய பெண்! பிரசன்னா, ஜனா பதில் என்ன??

03. கிழக்கில் ஜனாவின் திடுக்கிடும் கொலைகள் அம்பலம்! கூட்டமைப்பின் பதில் என்ன??

04. துரை, ஜனா, பிரசன்னா வண பிதா சந்திரா கொலையாளிகளா? நெஞ்சை வதைக்கும் நிமிடங்கள்

Telo-Jana

 

  • 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய ரெலோ அமைப்பினர் தமது பிள்ளைகளைக் கடத்திச் சுட்டுக் கொன்றது என்று 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    3,TELO படுகொலை செய்தது கலங்கிய பெண்! பிரசன்னா, ஜனா பதில் என்ன??
    ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்ற இந்த விசாரணைகளில் ரெலோ இயக்கமும், இராணுவத்தினரும் மேற்கொண்ட கடத்தல்கள் தொடர்பானதாகவே இருந்தது. அதேபோன்று சில முறைப்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவுமே இருந்தன.இவ்வாறாக கிழக்கு கொலைகளில் கருணா பிள்ளையான் இனியபாரதி PLOTE மாமா என பலர் ஈடுபட்டாலும் அவர்கள் அனைவரும் இன்று வரை அரச ஆதரவில் உள்ளனர் ரெலோ, EPRLF, PLOTE இவர்கள் தமிழ் ஈழம் கேட்பதற்கு தகுதியா? காரணம் இவர்கள் தமிழ் மக்களுக்காக அரசியலில் இன்றைய மட்டக்களப்பின் சாட்சியத்தில் ரெலோ இயக்கத்தை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ஒரு தாயார் இதற்கு இவர்களின் பதில் என்ன?

    தாயகம் தேசியம் கூறும் இவர்களால் என்ன பதில் கூற முடியும்! மட்டக்களப்பின் ஜனா, பிரசன்னா கூறத் தவறின் உரியவர்களை வதைக்கும் புகைப்படக் காட்சி, குடும்பத்தினரின் வீடியோ ஆதாரம் விரைவில்…..

    ஆலயத்திற்கு போய் வந்துகொண்டிருந்த மகனை சுட்டுக் கொன்றார்கள். இன்னொரு மகன் பாடசாலையிலிருந்து வந்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டான் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை நேசம்மா என்ற தாய், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

    மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாட்சிகளின் இறுதி சாட்சியப் பதிவின் போதே மேற்படி தாய் சாட்சியமளித்தார்.

    மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் தொடர்ந்து சாட்சியமளித்த நேசம்மா கூறியதாவது,

    ‘கடந்த 12.7.1989ஆம் ஆண்டு எனது மகன் பூபாலப்பிள்ளை திரேஸ்கான் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற தீப்பாய்வதில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் சுடப்பட்டார்.

    அப்போது, என் மகனுக்கு 22 வயதாகும். அவரை டெலோ இயக்கமும் விசேட அதிரடிப்படையினருமே சுட்டதாக அறிந்தேன். இப்படி சுட்டுக் கொல்லப்பட்டவர் எனது மூத்த மகன் என்று அழுதுகொண்டே சாட்சியமளித்தார்.

    அதேபோன்று, எனது இரண்டாவது மகன் பூபாலப்பிள்ளை சிறிகான், மட்டக்களப்பிலுள்ள பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார். பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது அவரை கடத்தி விட்டார்கள். என் மகனை யார் கடத்தினார்கள் என்று தெரியாது. இரண்டு பிள்ளைகளை இழந்து தவிக்கின்றேன்’ என அவர் கூறினார்.

    இதேவேளை, ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிபிள்ளை நல்லதம்பி சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

    ‘கடந்த 11.6.1997 அன்று எனது மகன் தங்கவடிவேல், பாடசாலைக்குச் சென்றவர் வீடு வரவில்லை. இவரை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என அறிந்தேன். யார் கடத்தினார்கள், எங்கு கொண்டு போனார்கள் என்பதுபற்றி தெரியாது.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை தெரியாது. எனக்கு அவர் ஒரு ஆண் பிள்ளை. மற்றைய இருவரும் பெண் பிள்ளைகள்’ என்றார்.

    ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி அருளய்யா என்பர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

    ‘எனது மகன் சிவானந்தா வித்தியாலயத்திற்கு கல்வி கற்க செல்பவர். கடந்த 5.10.1995 அன்று பாடசாலையை முடித்துவிட்டு வந்து விளையாடுவதற்காக விளையாட்டு மைதானத்திற்கு சென்றவர் மீள வீடு வந்து சேரவில்லை.

    தினமும் மாலை 5 மணிக்கு வீடு வந்து விடுவார். அன்றைய தினம் அவர் வீடு வராததால் அவரை தேடிச் சென்றோம். பின்னர் அவர் கடத்தப்பட்டு விட்டதாக அறிந்தேன்’ என்றார்.
    4,கிழக்கில் ஜனாவின் திடுக்கிடும் கொலைகள் அம்பலம்! கூட்டமைப்பின் பதில் என்ன??
    துரை,ஜனா,பிரசன்னா ஆகியோர்களின் கடந்தகால துரோக செயல்களை பற்றி செய்திகள் வந்தன குறிப்பாக,  வண பிதா சந்திரா அவர்களின் கொலை செய்யப்பட்ட விபரங்களை வாசித்து அறிந்து கொண்டேன் அதையிட்டு நான் அதிர்ச்சி அடையவில்லை ஏன் என்றால் இதை போல நூற்றுக்கணக்கான கொலைகளை இவர்கள் செய்துள்ளார்கள் இதற்க்கு பல உண்மை சம்பவங்களை உதாரனத்திட்கு உங்களின் கவனத்திற்கு என்னால் எழுத முடியும்.

    கோவிந்தன் கருணாகரன் (ஜனா) இவர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் செய்த அராஜகங்கள் அட்டுழியங்கள் கொலைகள் அனைத்தையும் எழுதி தீர்த்து விட முடியாது! ஜனா சொந்த ஊரான செட்டிபாளையத்தில் பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி பார்த்துக்கொண்டிருந்த புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைபரையும் ஜனாவின் தலைமையில் இந்தியன் இராணுவத்தின் உதவியோடு சுற்றி வளைக்கப்பட்டு அனைபரும் கைது செய்யப்பட்டு செட்டிபாளைய வாழை தோப்புக்குள் கொண்டு செல்லபட்டு ஜனாவின் தலைமையில் அனைபரும் அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டது மட்டுமல்லாது மனித இறைச்சியை ருசி பார்த்த பெருமையும் இந்த ஜனாவுக்கு உண்டு இதை ஜனவால் மறுக்க முடியுமா???

    இதை ஜனா மறந்தாலும் அந்த பிரதேச மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் அத்தோடு அந்த சம்பவத்தில் கொல்ல பட்ட அயல் கிராமமாகிய மாங்க்காட்டை சேர்ந்த அமிதலிங்கம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர்களின் குடும்பம் தான் மறக்குமா? இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தருமலிங்கத்தின் மனைவி மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு இப்போது நல்ல மனிதருக்கு வேஷம் போடும் இந்த ஜனவால் என்ன ஆறுதல் கூறமுடியும்?தங்களின் தந்தை ஏன் கொல்லப்பட்டார் என்கின்ற உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தர்மலிங்கத்தின் பிள்ளைகளுக்கு என்ன ஆறுதல் இந்த ஜனவால் கூற முடியும்?

    இதுமட்டுமா? சொந்த ஊரான செட்டிப்பாளையத்தில் வசித்து வந்த கோபாலன் மற்றும் கடுக்காமுனையை சேர்ந்தவரும் செட்டிபலயத்தில் திருமணம் செய்து செட்டிபாளையத்தினில் வாழ்ந்தவருமாகிய பெரியப்பா என்று அழைக்கப்படுபவர் (அவரின் உண்மையான பெயர் எனக்கு தெரியவில்லை) இவர்கள் இருபரையும் ஜனாவின் சொந்த தம்பியாகிய மாமா என்பவனால் இலங்கை இராணுவத்தின் உதவியோடு வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருபரையும் இரவு நேரத்தில் கைது செய்து செட்டிபாளைய இராணுவ முகாமுக்குள் கொண்டு செல்லபட்டு ஜனாவின் உத்தரவின் படி இருபரும் அடித்து கொலை செய்யபட்டார்கள் அவர்களோடு கைது செய்ய பட்ட பரமசிவம் (அலைக்ஸ்)என்பவர் பணம் வேண்ட்டி விடுதலை செய்யப்பட்டார் இதில் பாதிகபட்டவர்களுக்கு இந்த ஜனவால் என்ன அறுதல் கூறமுடியும்?

    இந்த உண்மையை ஜனாவல் மறுக்க முடியுமா? இதை போல் பல உண்மைகள், அத்தோடு இவைகளை எழுதி சரி பிழை என்று நான் விவாதிக்க எழுதவில்லை அனால் இவர்கள் காலத்துக்கு காலம் மக்கள் முன் போடும் வேசத்தைதான் விமர்சிக்கின்றேன் அன்று யாரை தேடி தேடி கொலை செய்தார்களோ இன்று அவர்களுக்காக மாறு வேஷம் போடுகின்றார்கள் பாவம் மக்கள் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு இந்த ஜனா பெரிய அறிக்கை கூட விட்டார் இந்த பாலச்சந்திரன் அப்போது இந்த ஜனாவின் கைகளில் கிடைத்திருந்தால் இந்த ஜனா என்ன செய்திருப்பார் ????

    இந்த கொலைகளுக்கு கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சிகளின் தலைவர்களின் பதில் என்ன? இன்றைய நிலையில் தமிழர்களின் தலைமைகள் கூட்டமைப்பினைத் தவிர வேறு இல்லை என வரிக்கு முழங்கும் மட்டக்களப்பின் கூட்டமைப்பின் பழுத்த அரசில் வாதிகள் உங்கள் பதிலை முன்வைப்பீர்களா? அல்லது இந்தக் கொலையாளிக்கு நீங்களும் உடந்தையா? நீங்கள் மக்களுக்கா? அல்லது இப்படிப்பட்ட கொலைகார அரசியல் வாதிகளுக்கா? விழக்குவீர்களா? அல்லது மக்களை விழுங்குவீர்களா? உங்கள் பதிலுக்காக….

    5,துரை, ஜனா, பிரசன்னா வண பிதா சந்திரா கொலையாளிகளா? நெஞ்சை வதைக்கும் நிமிடங்கள்
    எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்,

    இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.

    மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.

    1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

    பாதர் சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

    வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார் .
    தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று

    1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

    உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்

    1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

    பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

    இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

    மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

    தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

    இந்நாளில் தங்களைத் தமிழ்த் தேசிய வாதிகளாகக் காட்டி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.

    இவர்கள் இன்று பேசும், தாயகம், தேசியம் சுயநிர்னயத்தின் விலை தான் என்ன இதை கதைக்க இவர்கள் தகுதியானவர்களா இது பிழை என மறுக்க இவர்களிடம் திராணி உண்டா முடியுமானால் மறுக்கட்டும்

    இன்று மக்கள் உரிமை தனி நாடு கேட்கிறார்கள் அன்று செய்தது என்ன எத்தனை பெண்களை சீரளித்தார்கள் எத்தனை பெண்களை விதவை ஆக்கினார்கள் இவர்கள் இன்று செய்வது அரசியல் விபச்சாரம் இவர்களை அறியாத மட்டக்களப்பு மக்கள் இவர்களுக்கும் வாக்கிடும் துன்பியல் தமிழன் வாழா விட்டாலும் தமிழனை அழித்தவன் வாழக் கூடாது இதனை செய்வான மானமுள்ள தமிழன்

    மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.

    இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .

    இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.

    அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன

    இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பாதர் சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது

    உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.

    காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.

     

    பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நையப்புடைக்கப்பட்ட செல்வம், ஜனா,

  • செட்டியூரன்
SHARE