புதுமண தம்பதிகளாக இருந்த டான், ஜக்கி ஆகிய இருவரும் அவர்களது திருமணத்திற்கு வந்திருந்த 20-விருந்தினர்களும் ஏரியொன்றின் இறங்கு துறையில் திருமணத்திற்கு முந்திய சடங்குகளை படம் எடுக்க கூடியிருந்தனர். ஆனால் பழைய கப்பல்துறை பாரம் தாங்கமுடியாமல் இடிந்து விழ அனைவரும் தண்ணீருக்குள் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் மினசோட்டா பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதிஸ்டவசமாக இரண்டு மணப்பெண்ணின் தோழிகள் தண்ணீரில் நனையாமல் தப்பிவிட்டனர். எவரும் காயப்படவில்லை.
அனைவரும் உலர்த்தப்பட்ட பின்னர் திருமண வைபவம் நடந்துள்ளது.