அமெரிக்காவில் தொலைபேசி வலையமைப்பு மற்றும் இணைய வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனமாக Verizon Wireless திகழ்கின்றது.
இந் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடிச் சலுகைகளை வழங்கி வந்த நிலையில் தற்போது மாற்றம் ஒன்றினை மேற்கொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது வரையறையற்ற டேட்டா பக்கேஜினை இதுவரை வழங்கிவந்த நிலையில் அதனை 200GB வரையில் மட்டுப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றமானது எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
எனவே வாடிக்கையாளர்கள் இம் மாற்றத்திற்கு உடன்பட வேண்டும் அல்லது தமது சேவையிலிருந்து விடுபட முடியும் எனவும் Verizon நிறுவனம் அறிவித்துள்ளது.
தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த மொபைல் நெட்வேர்க் அனுபவத்தினை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், குறிப்பிட்ட அளவானவர்களே 200GB டேட்டாவை தாண்டி பாவனை செய்பவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.