Volkswagen Car-களுக்கு ரூ.1.30 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு: மாடல்கள் குறித்த விவரம்

152

 

வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாதம் 2024 வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

எந்த மாடல் கார்களுக்கு சலுகை?
Volkswagen நிறுவனத்தின் Volkswagen Taigun மற்றும் Volkswagen Virtus மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரொக்க தள்ளுபடி (cash discount), கார்ப்பரேட் தள்ளுபடி (corporate discounts) மற்றும் எக்சேன்ஜ் போனஸ் (exchange bonuses) வழங்கப்படுகின்றன.

Volkswagen Virtus
இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் மாதம் இறுதிவரை மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில், Volkswagen Virtus மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை சலுகைகள் கிடைக்கும்.

இதில் ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, ரூ.30,000 எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ.15000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

Volkswagen Taigun
Volkswagen Taigun மாடலுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையில், ரூ.60,000 ரொக்க தள்ளுபடி, ரூ.40,000 எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ.30,000 கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

இந்த சலுகையானது ஸ்டாக் இருப்பு, வேரியண்ட், பகுதி விற்பனை மையம், காரின் நிறம், powertrain மற்றும் இதர நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும்

SHARE