லட்சக்கணக்கான WhatsApp மற்றும் டெலிகிராம் கணக்குகளை Hackers எனும் ஊடுருவளாளர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணைய பக்கத்தில் பயன்படுத்தப்படும் WhatsApp சேவையில் பாதுகாப்பு அம்சத்தில் இருக்கும் பிழையால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்களை Hackers திருடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WhatsApp மட்டுமின்றி டெலிகிராம் செயலியும் இந்த தாக்குதலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான கணக்குகளின் உரையாடல்கள், தொடர்பு எண்கள் மற்றும் பகிர்ந்துள்ள தரவுகள் மட்டுமின்றி தனிப்பட்ட குறுந்தகவல்களும் குறித்த ஹேக்கர்களால் திருடும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
WhatsApp மற்றும் டெலிகிராம் செயலிகளை பொறுத்தமட்டில் அதன் பாதுகாப்பு அம்சங்களால் அனுப்புனரும் பெறுநரும் மட்டுமே தகவல்களை பார்வையிட முடியும்.
ஆனால் மொபைல் செயலி இல்லாமல் இணையத்தில் பயன்படுத்தும் WhatsApp-ல் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை தெரிந்துகொண்ட ஹேக்கர்கள் தற்போது லட்சக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தாக்குதலில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டெலிகிராம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த இரண்டு செயலி நிறுவனங்களும் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.