சம காலத்தில் பிரபல்யமாகக் காணப்படும் வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi இல் நன்மைகள் பல காணப்பட்ட போதிலும் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன.அதாவது Wi-Fi வலையமைப்பினை கடவுச் சொற்கள் கொண்டு பாதுகாக்காது விடின் அயலவர்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக இருத்தல், அல்லது கடவுச் சொற்களை தகர்த்து பாவனை செய்யக்கூடியதாக இருத்தல் என்பன குறைபாடுகளாக இருக்கின்றன.
இதன் காரணமாக தரவுப் பரிமாற்ற வேகம் குறைவடைகின்றது. தற்போது இதனை தவிர்ப்பதற்கு புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Massachusetts Institute of Technology (MIT) நிறுவனத்தின் கண்டுபிடிப்பில் உருவான Chronos எனும் சாதனமே அதுவாகும். இச் சாதனமானது Wi-Fi ரவுட்டலிருந்து நாம் பயன்படுத்தும் சாதனங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதனை கணக்கிட்டு தந்த எல்லையினுள் மட்டும் சமிக்ஞையை தரவல்லது. தவிர ஒரு அணுகல் புள்ளியை (Access Point) பயன்படுத்தி 20 தடவைகள் வரை வலையமைப்பில் ஒரு சாதனத்தை இணைக்க முடியும். இது தவிர குறித்த பயனர் வலையமைப்பினை பயன்படுத்திய நேரம், தரவு அளவு என்பவற்றினை கணக்கிட்டு ஒரு நேர வீச்சில் அதிகளவு தரவு பரிமாற்றப்படுகின்றதா அல்லது குறைந்தளவு தரவு பரிமாற்றப்படுகின்றதா என எடுத்துக்காட்டக்கூடியது. இது தவிர அதி உயர் கடவுச் சொல் பாதுகாப்பினை தரக்கூடியதாகவும் காணப்படுதல் விசேட அம்சமாகும். |